பெரியபாளையம் போக்குவரத்துக் கழக பணிமனைக்கு நேரக்காப்பாளர் நியமிக்க கோரிக்கை

பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் நேரகாப்பாளர் அறை
பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் நேரகாப்பாளர் அறை பல மாதங்களாக பூட்டி கிடப்பதால் பேருந்துகள் இயங்கும் நேரத்தை தெரிந்து கொள்ள முடியாமல் பயணிகள் அவதிப்படும் நிலை தொடர்கிறது.
இங்கு வந்து செல்லும் பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு பேருந்து நேரத்தை அறிந்து கொள்ள பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளர் அரை அமைக்கப்பட்டு பயணிகளுக்கு செல்லும் இடங்களுக்கு சென்று நேரத்தை தெரிந்து கொண்டு அதன்படி பயணம் செய்வார்கள். இந்த நிலையில் இந்த நேரக் காப்பாளர் அறை ஆனது சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக பூட்டி கிடப்பதால் பேருந்து நேரம் அறிந்து கொள்ள முடியாமல் மணிக் கணக்கில் நின்று செல்கின்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில்,நேர காப்பாளர் அறை செயல்பட்டு வந்தால் தாங்கள் செல்லும் இடத்திற்கு எந்த நேரத்தில் பேருந்துகள் வருகின்றது குறித்து அறிந்து அதற்கு ஏற்ப பயணம் செய்ய ஏதுவாக இருந்தது. தற்போது இந்த அறை மூடப்பட்டுள்ளதால் பேருந்துகள் நேரம் அறிந்து பயணம் செய்ய மிகவும் சிரமப்படுகிறோம். இதனை சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது தொடர்பாக, பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே இந்த நேர காப்பாளர் அறையில் நிரந்தரமாக நேரக்காப்பாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் சென்னை, விழுப்புரம் உட்பட மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சுமார் 22,399 பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் புதிய பஸ்கள் வாங்கப்படுகிறது. இருப்பினும் பஸ்களில் முழுமையாக பராமரிப்பு பணிகள் நடப்பதில்லை. ஆரம்பத்தில் 2 பஸ்களுக்கு ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப அலுவலர் உட்பட மொத்தம் 15 (ஒரு பஸ்சுக்கு 7.5 ஊழியர்) தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். 2003-ல் அப்போது இருந்த அரசு ஆட்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன்படி, தொழிலாளர் களின் எண்ணிக்கை 2 பஸ்களுக்கு 13 ஆக (ஒரு பஸ்சுக்கு 6.5 ஊழியர்) குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அரசு போக்குவரத்து துறையில் சுமார் 12 ஆயிரம் பணியிடங்கள் நிரபப்படாமல் உள்ளன.
தமிழகம் முழுவதும் மொத்தம் 320 போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இதில் தொழில்நுட்ப பிரிவில் சராசரியாக 9,500 பேர் இருக்கின்றனர். இந்தப் பிரிவில் மட்டுமே ஏறத்தாழ 6,000 காலி பணியிடங்கள் உள்ளன. ஏற்கெனவே, ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், சில போக்குவரத்துக் கழகங்களில் தொழில்நுட்ப பணியாளர்களை முன்பதிவு மையம், நேரக் காப்பாளர் உள்ளிட்ட அலுவலகப் பணிகளில் ்அமர்த்தப்படுகின்றனர். ஆண்டுதோறும் 5 சதவீதம் ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். பணி நியமனம் செய்யப்படாததால், இருக்கும் தொழிலாளர்கள் கூடுதல் பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu