எல்லாபுரம் ஒன்றியத்தில் 53 ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டம்

எல்லாபுரம் ஒன்றியத்தில் 53 ஊராட்சிகளில்    நடந்த கிராம சபை கூட்டம்
X

எல்லாபுரம் ஒன்றியத்தில் குடியரசு தினவிழாவையொட்டி கொடியேற்றிய பின் கிராம சபைக்கூட்டம் நடந்தது. 

Republic Day Grama Saba Meet குடியரசு தினத்தையொட்டி எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

Republic Day Grama Saba Meet

75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு எல்லாபுரம் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 75-ஆவது குடியரசு தினத்தை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.. குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் திருக்கண்டலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி தலைமை ஏற்று முன்னதாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கும் பள்ளி மாணவிகளுக்கும் இனிப்புகளை வழங்கினார்.இதில் ஊராட்சி செயலர் உமாநாத், ஊராட்சி துணைத் தலைவர் லிங்கா துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கன்னிகைப் பேர் ஊராட்சி கிராம சபை கூட்டம் பழைய அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் அதன் தலைவர் காயத்ரி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மேனகா சுப்பிரமணி, ஊராட்சி செயலர் பொன்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தொழு நோயால் பாதிக்கப்படும் நபர்களை நாம் ஒதுக்கி வைக்காமல் நம் குடும்பத்தில் ஒருவராக அவர்கள் அரவணைத்து அவர்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்கு அனைத்து தரப்பு மக்களும் முன்வர வேண்டும் என இது குறித்து கிராம சபை கூட்டத்தில் உறுதிமொழி ஏற்றப்பட்டது.


இதே போல் வெங்கல் ஊராட்சி கிராம சபை கூட்டம் மன்ற வளாகத்தில் அதன் தலைவர் சுகந்தி ராணி லிங்கன் தலைமையில் நடைபெற்றது, இதில் ஒன்றிய குழு உறுப்பினர் திருமலை சிவசங்கரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கணபதி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அக்கரப்பாக்கம் ஊராட்சி கிராம சபை கூட்டம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நளினி மணிகண்டன், மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கு முறையாக கிராம சபா அறிவிப்பு தெரிவிக்காததை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். ஆலப்பாக்கம் ஊராட்சி கிராம சபை கூட்டம் மன்றவளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது இதில் துணைத் தலைவர் செல்வம், மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தாமரைப்பாக்கம் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா துளசிராமன் தலைமையில் நடைபெற்றது,பெருமுடிவாக்கம் ஊராட்சி கிராம சபை கூட்டம் பள்ளி வளாகத்தில் அதன் தலைவர் பாலலட்சுமி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேது ராம்குமார் மட்டும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business