திருவள்ளூரில் டிரான்ஸ்பார்மரில் பழுது சரிசெய்த மின் ஊழியர் பலி

திருவள்ளூரில் டிரான்ஸ்பார்மரில் பழுது சரிசெய்த மின் ஊழியர் பலி
X
திருவள்ளுர் அருகே மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மின் ஊழியர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி மின்பகிர்மான பிரிவில் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் உமாபதி (45). கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பூண்டி மின் பகிர்மான பிரிவில் மின் ஊழியராக பணிபுரிந்து வந்தார்..

நேற்று இரவு புல்லரம்பாக்கம் ஜெ.ஜெ நகர் பகுதியில் மின் துண்டிப்பு ஏற்பட்டதால், பொதுமக்கள் பூண்டி மின் பகிர்மான துணை பொறியாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து மின் பகிர்மான பொறியாளர் மின் ஊழியருக்கு தகவல் அளித்துள்ளார். அவரின் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த மின் ஊழியர், ஏற்பட்ட மின் பழுதை சரி செய்வதற்காக

மின் பகிர்மான டிரான்ஸ்பார்மர் மேலே ஏறி சரி செய்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அவருடன் வந்த பணியாளர் ஏழுமலை புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார்.தகவலின் அடிப்படையில் வந்த போலீசார் அவரது உடலை மீட்டு திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Next Story