திருவள்ளூரில் சீரமைக்கப்பட்ட பூங்கா திறப்பு விழா :எம்எல்ஏ பங்கேற்பு
திருவள்ளூர் நகராட்சி பாரதி நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 24 லட்சத்தில் பூங்கா சீரமைக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்காக எம் எல் ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், சந்திரன் திறந்து வைத்தார்.
Renovated Park Opening Ceremony
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகராட்சி 24-வது வார்டு பாரதி நகரில் நமக்கு நாமே திட்டம் 2022 - 23-ன் கீழ் பூங்காவை தனியார் (பெடரல் ) வங்கி சமூக பொறுப்பு நிதி ரூ.8 லட்சம் மற்றும் நகராட்சி சார்பில் ரூ.18 லட்சம் என மொத்தம் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தி அதன் திறப்பு விழாவானது.
Renovated Park Opening Ceremony
நகர மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையிலும்,நகராட்சி ஆணையர் சுபாஷினி, நகர்மன்ற துணைத் தலவைர் சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றஇந்நிகழ்ச்சியில்சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எம்எல்ஏ சந்திரன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரூ. 24 லட்சத்தில் மேம்படுத்திய பூங்காவை பொது மக்களின் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
Renovated Park Opening Ceremony
இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தி வேலாயுதம், நீலாவதி பன்னீர் செல்வம், கே.பிரபாகரன், அயூப் அலி, செல்வகுமரன், இந்திரா பரசுராமன், ஜி.கந்தசாமி, ஆர்.விஜயகுமார், நகராட்சி பொறியாளர் ஏ.நடராஜன், உதவி பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu