திருவள்ளூரில் தனியார் டிரஸ்ட் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணம்: அமைச்சர் துவக்கம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அமைச்சர் நாசர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் செல்டர் டிரஸ்ட் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண திட்டத்தினை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி சார்ந்த இடங்களான திருப்பாச்சூர், குப்பம்மாள்சத்திரம், வரதாபுரம் போன்ற இடங்களில் வாழும் சுமார் 1000 ஏழை எளிய குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண திட்டத்தினை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் மூலம் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தல 5 கிலோ அரிசி, துவரம்பருப்பு1 கிலோ , கோதுமை மாவு 1 கிலோ, எண்ணெய் 1/2 கிலோ , மிளகாய் தூள் 200 கிராம், தனியா தூள் 100 கிராம், மஞ்சள்தூள் 100 கிராம், 1/2 கிலோ மூக்கடலை, சர்க்கரை 1/2 ,2 பாக்கெட் சேமியா, கடுகு 100 கிராம், வெந்தயம் 100 கிராம், சீரகம் 50கிராம், போன்ற நிவாரண தொகுப்பினை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பூபதி, செல்டர் டிரஸ்ட் நிறுவனர் சாலமோன் ராஜா சமூக பணியாளர்கள் டாக்டர் பாலாஜி செல்வின், ஜெயபால், ஸ்ரீதர், அருண் குமார், பிரபா ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu