திருவள்ளூர் அருகே ரூ.75 கோடி மதிப்பிலான அரசு நிலங்கள் மீட்பு
ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகள்.
தமிழகம் முழுவதும் நீர்நிலைகளான. ஏரி குளங்கள் ஆறுகள் உள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரை சேமிக்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதன் அடிப்படையில் திருவள்ளூர் அருகே பொதுப்பணித்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள 376 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஈக்காடு ஏரியில் சுமார் 75 கோடி ரூபாய் மதிப்பிலான 150 ஏக்கர் நிலத்தில் மீன் பண்ணை, விவசாயம், செங்கல் சூளை என ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் தற்போது முதல் கட்டமாக திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 ஏக்கர் நிலத்தில் செங்கல் சூளை கருங்கற்கள் கொண்டு வேலி அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 13 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்கப்பட்டது.
மேலும் மீதமுள்ள 137 ஏக்கர் நிலம் ஓரிரு நாட்களில் முழுவதுமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில் குமார் தெரிவித்தார். சம்பவ இடத்தில் திருவள்ளூர் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அகற்றிய இடத்தில் யாரும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று அறிவிப்பு எச்சரிக்கை பலகை நட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu