திருவள்ளூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் எரித்து கொலை? : போலீசார் விசாரணை

திருவள்ளூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் எரித்து கொலை? : போலீசார் விசாரணை
X
திருவள்ளூர் அருகே பாப்பரம்பாக்கம் கிராமத்தில் சாலையோரம் எரிந்த நிலையில் நின்ற கார் அருகே குணசேகரன் இறந்து கிடந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அடுத்த அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (63). கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இவர் மனைவி, மகன்களை பிரிந்து தனியாக வசித்து வருகின்றார் இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இந்தநிலையில் திருவள்ளூர் அருகே உள்ள பாப்பரம்பாக்கம் கிராமத்தில் சாலையோரம் எரிந்த நிலையில் கார் ஒன்று நின்றது. அதன் அருகே குணசேகரன் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் மணவாளநகர் போலீசார் பாதி எரிந்த நிலையில் உள்ள குணசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் காரணமாக யாராவது இவரை கொலை செய்தாரா அல்லது குடும்ப தகராறு காரணத்தினால் வேறு ஏதாவது பிரச்சனை காரணத்தினால் என்ன பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!