அரக்கோணம் அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரவி எம்எல்ஏ ஆறுதல்

அரக்கோணம் அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரவி எம்எல்ஏ ஆறுதல்
X

விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு  ரவி எம்எல்ஏ ஆறுதல் கூறினார்.

அரக்கோணம் அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரவி எம்எல்ஏ ஆறுதல் கூறினார்.

அரக்கோணம் அருகே விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அரக்கோணம் எம்எல்ஏ ரவி. எக்ஸ்ரே, ஸ்கேன் எதுவும் செயல்படாததால் காலை 11 மணி முதல் அலைக்கழிக்கப்பட்டு 5 மணிக்கு மேல் சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டப்பட்டு உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மூதூர் கிராமத்திலிருந்து விவசாய பணிக்காக 30 க்கும் மேற்பட்ட பெண்கள் டிராக்டர் மூலமாக அருகிலுள்ள ஆணைப்பாக்கம் கிராமத்திற்கு சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிராக்டரில் பயணம் செய்த பெண்கள் காயமடைந்து மூதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மருத்துவர் பற்றாக்குறையால் அவர்களை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் கோட்டீஸ்வரி உள்ளிட்ட 10 பேருக்கு எலும்பு முறிவு போன்ற பாதிப்பு காரணமாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். காலை 11 மணியளவில் வந்த காயமடைந்தவர்களுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற எதுவும் செயல்படாததால் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்து எதிர் கட்சி துணை கொறடாவும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ சு.ரவி அரக்கோணத்தில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்த நிலையில் இங்கு எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற எந்த சகிச்சையும் அளிக்காமல் அலைக்கழித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்ததாகவும், இதனால் மருத்துவர்களை அழைத்து விசாரித்ததில் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என உறுதி அளித்ததாக கூறினார். மேலும், திமுக ஆட்சியில் மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Tags

Next Story