திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை சிறப்பு முகாம் :மாவட்ட ஆட்சியர் தகவல்

Ration Card Correction Special Camp
இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோத்தல், நீக்கல் மற்றும் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 9 இடங்களில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் நீக்கல் உள்ளிட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருவதாகவும் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர் செய்தி குறிப்பில் தெரிவித்தார். இந்த தகவலின் படி புது மாவிலாங்கை கிராமத்தில் உள்ள நியாய விலை கடை அருகில், அதேபோல் ஊத்துக்கோட்டை வட்டத்தில் சீயஞ்சேரி கிராமத்திலும், பூந்தமல்லி இருளப்பாளையம் நியாய விலை கடை அருகில், திருத்தணி வியாசபுரம் கிராமிய கலை அருகிலும், பள்ளிப்பட்டு மேல்குடி கிராமத்தில், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் மெதி பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் ஆவடி அன்னம்பேடு கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்திலும், ஆர்கே பேட்டை எஸ்பி கண்டிகை கிராமம் நியாய விலை கடை அருகில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதாகவும் இந்த சிறப்பு முகாம்களில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சரியான ஆவணங்களையும் புகைப்படங்களும் எடுத்துச் சென்று பதிவு செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் பிரபுசங்கர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu