விற்பனைக்காக அரிய வகை பறவைகள் வேட்டை:வனத்துறை அதிரடி
கடம்பத்தூர் பகுதியில் விற்பனைக்காக வேட்டையாடிய அரிய வகை பறவைகளை வனத்துறையினர் கைப்பற்றினர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியில் அரிய வகை பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்வதாக தி நேச்சர் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தது. இதன்பேரில் திருவள்ளூர் வனச்சரக அலுவலர் கிருஷ்ணகுமார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சட்டத்துக்கு புறம்பாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காமன் கூட், இந்தியன் மார்கன், நார்தன் பின்டேல், காட்டன் பிக்மி கூஸ் ஆகிய பறவை இனத்தை சேர்ந்த 28 பறவைகள் உயிரிழந்த நிலையில் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக வன உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கைப்பற்றப்பட்ட பறவை உடல்கள் திருவள்ளூர் மாவட்ட கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள 2 குற்றவாளிகளை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu