திருநின்றவூர் பழமை வாய்ந்த ராமர் கோவில் கும்பாபிஷேக விழா

திருநின்றவூர் பழமை வாய்ந்த ராமர் கோவில் கும்பாபிஷேக விழா
X

திருநின்றவூர் பழமை வாய்ந்த ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

திருநின்றவூர் அருகே பழமைவாய்ந்த ராமர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருநின்றவூர் அருகே பழமைவாய்ந்த ராமர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் பழமைவாய்ந்த சீதா லட்சுமண சமேத அனுகூல பத்ராச்சல ராமர் திருக்கோவில் அமைந்துள்ளது.இந்த கோவில் கிராம மக்களின் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.இதனை பின்னர் சிவாச்சாரர்கள் யாகசாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கலசங்களில் அடங்கிய புண்ணிய நதி நீர்களை கொண்டு ராமர் கோவில் கோபுரத்தின் கலசத்திற்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.


இதனை தொடர்ந்து கோவில் முன்பு 23 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் பக்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு ராமபிரானை வணங்கினர். இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆலயத்தில் உள்ள மூலவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆலயத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை விழாக்குழு நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Next Story