திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை
X
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள அசானி புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனையடுத்து தமிழகத்தில் நேற்று இரவு முதல், அதிகாலை வரை பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட பல இடங்களில் இன்று காலை தொடங்கிய மழை, சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. பல பகுதிகளில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்ததால் வெப்பம் குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!