ராகுல்காந்தி தண்டனை நிறுத்தி வைப்பு: காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ராகுல்காந்தி தண்டனை நிறுத்தி வைப்பு: காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய காங்கிரசார்.

ராகுல்காந்தி தண்டனை நிறுத்தி வைத்த உத்தரவை கொண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கினர்.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி நிராகரித்தது.

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். மேலும் அந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளான பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம்மானது ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டைனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் கொண்டாடும் விதமாக திருவள்ளூர் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஈ.கை, ஜோஷி, தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.எம். தாஸ், கலந்து கொண்டு திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பாஜார் வீதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் அன்பரசன், மாவட்ட பொது செயலாளர் சிவக்குமார், மாவட்ட வட்டாரத் துணைத் தலைவர் குமார், கிராம கமிட்டி தலைவர் பொன்ராஜ் (என்ற) சீனிவாசன், ஆகியோர் உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது