ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்

திருவள்ளூரில் காங்கிசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராகவும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்துள்ளதை கண்டித்து திருவள்ளூர் ரயில் நிலையம் முன்பு திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸார் சத்தியாகிரக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய காரணத்திற்காக ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு வருடம் சிறை தண்டனை விதித்தது. அதன் அடிப்படையில் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் அமைதி வழியில் "சத்தியாகிரக' அறவழிப்போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருவள்ளூர் ரயில் நிலையம் முன்பு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை தாங்கினார். திருவள்ளூர் நகர் தலைவரும், நகர்மன்ற உறுப்பினரான வி.இ.ஜான் முன்னிலை வகித்தார்.
இதில் திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கண்டன உரை ஆற்றினர். அப்போது ராகுல் காந்தி பதவி பறிப்புக்கு நியாயம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாலை 5 மணி வரையில் அறவழிப்போராட்டத்தில் நிர்வாகிகள் ஆனந்தன், மோகன்தாஸ், அஸ்வின்குமார், நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், மோகன்தாஸ், அருண்மொழி, ஆரணி பேரூர் துணைத்தலைவர் வழக்கறிஞர் சுகுமார், சசிகுமார், உமாவதி, திருவலாங்காடு வட்டார தலைவர் ராமன், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய வட்டார தலைவர் வெங்கல் சிவசங்கரன், பூண்டி வட்டாரத் தலைவர் பழனி, கும்மிடிப்பூண்டி வட்டாரத் தலைவர் பெரியசாமி, திருவள்ளூர் மாவட்ட துணை தலைவி சரஸ்வதி,உள்பட 200-க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சி சார்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu