தக்காளி விலை உயர்வு: பொதுமக்கள் அவதி..!

தக்காளி விலை உயர்வு: பொதுமக்கள் அவதி..!
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த் 2 நாட்களாக தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திருவள்ளூர் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன. மேலும் திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் திருவள்ளூர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மார்க்கெட்டுக்கு கோயம்பேடு பெங்களூர், ஆந்திராவில் இருந்து தக்காளி வருகிறது. மழை மற்றும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் காய்கறிகளில் விலை அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு விற்கப்பட்டு வந்த காய்கறிகள் திடீர் விலையேற்றத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதற்கு முன்பாக 5 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில், தற்போது இன்று திடீரென ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதேபோல் ஒரு கிலோ அவரைக்காய் 30 ரூபாயில் இருந்து 80 ரூபாய் எனவும் ஒரு கிலோ பீன்ஸ் 50 ரூபாயிலிருந்து 90 ரூபாய் எனவும் விலை ஏற்றத்துடன் விற்கப்பட்டு வருகிறது.

அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் தக்காளி அவரை பீன்ஸ் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். தக்காளி வரத்து குறைவு எனவும் கோயம்பேடு மார்க்கெட்டில் அதிக விலைக்கு வியாபாரிகளுக்கு கொடுப்பதாகவும், இதனால் கொண்டு வந்து விற்பனை செய்யும் வியாபாரிகள் கூடுதலாக விலை வைத்து விற்கப்படுவதால் இந்த தக்காளியின் விலை அதிகமாக உள்ளதாக வியாபாரிகளும் பொதுமக்களும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!