மாயமான இளைஞரின் உடலை கண்டுபிடிக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

Public Requested To Identify Youth Body
பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சென்றபோது இளைஞர் மாயமான சம்பவம் 2 நாட்களாக தேடும் பணியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறி அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை பகுதியில் வசித்து வரும் சுடலைமணி என்பவரது மகன் அருள்ராஜ் ( வயது 23) இவர் பழைய இரும்பு கடையில் கூலி வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் மாலையில் நண்பர்களுடன் சேர்ந்து தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் குளிக்க சென்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற அருள்ராஜ் திடீரென நீரில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சக நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கல் போலீசார் மற்றும் தேர்வாய் சிப்காட் தீயணைப்பு துறையினர் மாயமான அருள் ராஜை இரவு வரை தீவிரமாக தேடி வந்தனர்.
Public Requested To Identify Youth Body
.இன்று காலை முதல் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் கும்மிடிப்பூண்டி தீயணைப்புத் துறையினர் பைபர் படகுமூலம் காணாமல் போன அருள் ராஜை தேடிவந்த நிலையில் இரண்டு நாட்களாக தேடும் பணியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறி அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தாமரைப்பாக்கம் பெரியபாளையம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கல் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் அருள்ராஜின் உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மாயமான இளைஞர்கள் உடலை தீவிரமாக தேடி வருவதாகவும், விரைவாக கண்டுபிடித்து தருவோம் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது இதனால் திருவள்ளூர் பெரியபாளையம் இடையே சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu