நீர் சேமிக்கும் வகையில் ஏரியை தூர்வார வேண்டும் : மாவட்ட ஆட்சியரிடம் மனு

Public Requested To Collector
திருவள்ளூர் அருகே பாசனத்திற்கு பயன்பெறும் வகையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் அதிகளவில் நீரை தேக்கி வைக்கும் வகையில் தூர்வாரக்கோரி ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்கத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், விடையூர் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி தலைவர் ஏழுமலை மற்றும் ஏரி நீரை பயன்படுத்துவோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
விடையூர் கிராமத்தில் சித்தேரி மற்றும் பெரிய ஏரி ஆகியவை பனநீர்வளத்துறைக்கு சொந்தமானதாகும். இதுநாள் வரையில் பொதுப்பணித்துறை மூலம் ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஏரி நீர் பாசனத்திற்கு பயன்பட்டது இல்லை. அதற்கு காரணம் ஏரியில் நீர் தேக்கி வைக்க தூர்வாரதது, கால்வாய் பராமரிப்பு இல்லாதது போன்றவையாகும்.
இதுபோன்ற காரணங்களால் மேடாக இருப்பதால் மழைக்காலங்களில் மழை தண்ணீர் அனைத்தும் பூண்டி ஏரியில் கலந்து விடுகிறது. இதனால், இந்தக் கிராமத்தில் உள்ள விவசாயிகள் நீரை விவசாய சாகுபடிக்கு பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. அதனால், விவசாய கிணறுகள், கிராமங்களில் ஆழ்குழாய் கிணறுகளுக்கும் போதுமான நீர் ஆதாரம் ஏற்படும் வகையில் ஏரியில் அதிகளவில் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.ூ
நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu