குற்ற சம்பவங்கள் தடுக்க பொதுமக்கள்- காவல்துறை கலந்தாய்வு கூட்டம்

குற்ற சம்பவங்கள் தடுக்க பொதுமக்கள்- காவல்துறை கலந்தாய்வு கூட்டம்
X

குற்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்கள்- காவல்துறை கலந்தாய்வு கூட்டம் செங்குன்றத்தில் நடைபெற்றது.

செங்குன்றத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் காவல்துறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

செங்குன்றத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்கள்,காவல் துறையினர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட செங்குன்றம், சோழவரம், மீஞ்சூர், காட்டூர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை குறைத்திடும் நோக்கில், அந்தந்த பகுதி மக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆவடி காவல் ஆணையர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

குற்ற சம்பவங்களை தடுத்திடவும், எளிதில் குற்றவாளிகளை கண்டறியவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நடைபாதை கடைகளை சீரமைப்பு செய்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கவும், அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரைசந்திரசேகர் ஆகியோர் பொது மக்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.

மேலும், வியாபார சங்கங்களின் தலைவர்கள் ஊர் பிரதிநிதிகள் குடியிருப்பு சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்துரையாடி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.அப்போது பேசிய ஆவடி காவல் ஆணையர் சங்கர், ஆவடி காவல் ஆணையகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது எனவும், பொது மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாகவும், செங்குன்றத்தில் போக்குவரத்து பிரச்சினைகள், சேவை சாலைகளில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவது, சுங்கச்சாவடி அருகே நிறுத்தப்படும் வாகனங்கள், மீஞ்சூர் ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் மணிக்கணக்கில் வாகனங்கள் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும்,குற்றச்செயல்களை தடுக்க சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் போலீஸ் பூத் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் மழை நீர்வடிகால் பணிகளால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவும், கூடிய விரைவில் சரி செய்யப்பட்டும் எனவும், சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணித்து இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Tags

Next Story