திருவள்ளூரில், தி.மு.க ஆட்சி ஓராண்டு சாதனை பொதுக்கூட்டம்: திண்டுக்கல் லியோனி கலகலப்பு பேச்சு

திருவள்ளூரில், தி.மு.க ஆட்சியின் ஓராண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் லியோனி.
DMK News Tamil -திருவள்ளூர் மத்திய மாவட்ட வடக்கு ஒன்றியம் சார்பில் கலைஞரின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி, பால்வளத்துறை அமைச்சர் சாமு.நாசர், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் லியோனி பேசுகையில், ஒரு அமைச்சர் எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கான குணங்களை பெற்றிருந்த ராஜேந்திரபாலாஜிக்கு நேர் எதிராக ஒரு அமைச்சர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு தற்போதுள்ள பால்வளத் துறை அமைச்சர் சாமு. நாசரை, முதல்வர் ஸ்டாலின் நியமித்தது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
மேலும் 30 ஆண்டுகள் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்து 2011ஆம் ஆண்டு தி.மு.க.,வுக்கு பிரசாரம் செய்ததால் தனக்கு விருப்பு ஓய்வு கொடுத்து பள்ளியை விட்டு அனுப்பி விட்டனர் எனவும் ஆனால், தி.மு.க ஆட்சியில் அமர்ந்ததும் தனக்கு பாடநூல் கழகத் தலைவர் பதவியை தமிழக முதல்வர் அளித்தமைக்கு நன்றி எனவும் அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, காவல்துறையினரை உயர்த்தியும் தாழ்த்தியும் நகைச்சுவை பாணியில் திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார். அப்போது, தமிழக முதல்வர் எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தற்போது மாணவர்கள் செல்போன் மூலம் எளிதாக படிக்க முடிகிறது எனவும் தங்கள் காலத்தில் கல்வி கற்பது மிகவும் கடினமாக இருந்ததாகவும் இத்திட்டம் திராவிட மாடல் ஆட்சிக்கு பெருமை தேடி தருகின்ற திட்டம் எனவும் லியோனி கூறினார்.
சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் செங்கோட்டை பக்கத்தில் அறிவாலயம் கட்டப்பட்டது எதற்காக என்றால் வருகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் யாரை கை காட்டுகிறாரோ, அவர்தான் பாரதப் பிரதமராக வருவார் என சூசகமாக அறிவிக்கவே என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu