சேதமடைந்த கிருஷ்ணா கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சேதமடைந்த கிருஷ்ணா கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
X

ஊத்துக்கோட்டை அருகே மிக்ஜாம் புயல் காரணமாக கிருஷ்ணா கால்வாயில் பல்வேறு பகுதியில் கரையின் இரு புறம் அமைத்திருந்த கான்கிரீட் சிலாப்புகள் சரிந்து சேதம் ஏற்பட்டுள்ளது. 

ஊத்துக்கோட்டை அருகே புயல் காரணமாக கிருஷ்ணா கால்வாயில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை அருகே மிக்ஜாம் புயல் காரணமாக கிருஷ்ணா கால்வாயில் பல்வேறு பகுதியில் கரையின் இரு புறம் அமைத்திருந்த கான்கிரீட் சிலாப்புகள் சரிந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனை போக்க தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983-ம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது. அதன்படி ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணையிலிருந்து கால்வாய் மூலம் கொண்டுவரப்பட்டு சோமசிலா என்ற இடத்தில் உள்ள அணையில் சேமித்து அங்கிருந்து நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் சேமித்த தண்ணீர் கொண்டு வரப்பட்டு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

இதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோ மீட்டர் தூரம், தமிழகத்தில் 25 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அதாவது தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் வழியாக திருந்த விடப்படும் தண்ணீர் ஆனது பூண்டி ஏரியில் சேமித்து வைத்து அங்கிருந்து கால்வாயில் மூலமாக சோழவரம், புழல் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்கு சொத்துக்கறிக்கப்பட்டு அந்த தண்ணீரை சென்னை மக்களின் குடிநீருக்காக வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் மற்றும் ஆந்திராவில் பலத்த மழைக்கு தண்ணீர் சீறிப்பாய்ந்ததால் தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிருஷ்ணா நதி நீர் செல்லும் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் 4.வது கிலோமீட்டர் இருந்து ஆலப்பாக்கம் 10.வது கிலோ மீட்டர் வரை என 6.கிலோமீட்டர் தூரத்திற்கு ரூபாய் 24 கோடி மதிப்பீட்டில் அண்மையில் கால்வாய் சீரமைத்து கான்கிரீட் சிலாப்புகள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் செப்டம்பர் மாதம் வரை திறக்கப்பட்டதால் தமிழகத்திற்கு 3.5 டிஎம்சி தண்ணீர் கிடைத்தது. பின்னர் அம்மாத இறுதியில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்திலும், அருகிலுள்ள ஆந்திராவில் பரவலாக மழை பெய்தது.

மேலும் மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கால்வாயில் இருபுறம் உள்ள கான்கிரீட் சிலப்புகள் சரிந்து ஒரு சில இடங்களில் சிமெண்ட் சிலாப்புகள் உடைந்து காணப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில் இந்த கிருஷ்ணா நதிநீர் செல்லும் கால்வாயில் பல ஆண்டுகளாக அடிக்கடி சேதமடைந்த இடங்களில் பொதுப்பணித்துறை சார்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதும், மீண்டும் மழை பெய்தால் இதே நிலைமை நீடித்து வருவதாகவும் பணிகளை அதிகாரிகள் சரிவரை செய்வதில்லை என்றும் அரசு வழங்கும் நிதியை வீணாக செல்வதாகவும், இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகி செல்வதாக குற்றம் சாட்டினர்.

எனவே மீண்டும் தண்ணீர் திறப்பதற்குள் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!