திருவள்ளூர் அருகே நூலகத்தை சீரமைத்து திறக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர் அருகே நூலகத்தை சீரமைத்து திறக்க பொதுமக்கள்  கோரிக்கை
X
பழுதடைந்த நூலக கட்டிடம்.
திருவள்ளூர்மாவட்டம் எல்லாபுரம் அருகே நூலகத்தை சீரமைத்து மீண்டும் திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எல்லாபுரம் அருகே அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் பராமரிப்பு இல்லாத நூலகத்தை சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கிராம மக்கள் மற்றும் படித்த இளைஞர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நூலக கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த நூலகத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், படித்து முடித்த இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் நாள்தோறும் இந்த நூலகத்திற்கு வந்து நாளிதழ்கள், மாணவர்கள் படிப்பைச் சார்ந்த புத்தகங்கள் உள்ளிட்டவை படித்து பயன்பெற்று வந்தனர்.

இது மட்டுமல்லாமல் படித்த பெண்கள் தாங்களுக்கு தேவையான அறிவு சார்ந்த புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று வாசித்து வந்தனர். ஆனால் தற்போது இந்த நூலக கட்டிடம் கடந்த மூன்று ஆண்டுகளாக நூலகர் இல்லாமல். பராமரிப்பு இல்லாத காரணத்தினால் புத்தகங்கள் திருடப்பட்டு நூலகம் மூடப்பட்டது. இது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகிறது.

அப்பகுதி மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இந்த நூலகம் . கடந்த காலங்களில் இந்த நூலகத்தில் புத்தகங்கள் படித்தவர்கள் இன்று நல்ல நிலையில் உள்ளனர். எனவே இந்த கிராமப்புற நூலக கட்டிடத்தை சீர் செய்து நூலகரை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று. சமூக ஆர்வலர்களும் அப்பகுதியை சேர்ந்த மக்களும் படித்த இளைஞர்களும், கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
ai solutions for small business