வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து, திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் புதிதாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்தும் அதனைத் சமஸ்கிருத மொழியில் தலைப்பு வைக்கப்பட்டதை கண்டித்தும் தமிழக முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்,
இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து மாநில துணைத்தலைவர்கள் வி ஆர், ராம்குமார், மற்றும்எஸ்கே, ஆதாம் ,தலைமையில் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும் புதிதாக கொண்டுவரப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களை உடனே திரும்ப பெற வேண்டும் எனவும் குற்றவியல் சட்டங்களுக்கு தலைப்பினை சமஸ்கிருத மொழியில் வைத்துள்ளதை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பொருளாளர்,அம்பத்தூர், முரளி பாபு,மண்டல செயலாளர் பாலமுருகன்,தலைமை கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர்கள் வி.ஆர்.ராம்குமார்,எஸ்கே ஆதாம்,கண்டனூரை அம்பத்தூர் முரளி பாபு, பாலமுருகன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலர் உறுப்பினர் ஸ்ரீ முருகா, திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற சங்கங்கள் தலைவர் விஜய் பாபு,ஜெய் சுந்தர்,லேமுவேல், முரளி,செயலாளர்கள் ஆனந்த் குமார்,சுரேஷ், தீனசீலன்,பூவண்ணன்,மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் உதயகுமார், நளின்குமார், ராமச்சந்திரன், மதுரை வீரன், மில்டன், ஸ்ரீதர், தசரதன், சதீஷ்குமார், பிரேம்குமார், மற்றும் கூட்டமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் சுனில் சுந்தரேசன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu