சி ஐ டி யு சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்பாட்டம்

Today Protest News | CITU Strike
X
திருவள்ளூரில், சிஐடியு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
Today Protest News -பொதுத்துறை ஊழியர்களுக்கு, 10 சதவீத போனஸ் அறிவித்ததை கண்டித்து, சிஐடியு சார்பில், கண்டன ஆர்பாட்டம் நடந்தது.

Today Protest News -தமிழக அரசு, பொதுத்துறை ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவித்ததை கண்டித்து, சிஐடியு சார்பில், திருவள்ளூர் ரயிலடி அருகில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.

தமிழக அரசு தன்னிச்சையாக போனஸ் அறிவித்ததை கண்டித்து, 'டாஸ்மாக்' ஊழியர்கள் சங்கம், போக்குவரத்து ஊழியர்கள், மின் ஊழியர்கள் சங்கம் (சிஐடியு), சார்பில் திருவள்ளூரில் ஆர்பாட்டம் நடந்தது. 'டாஸ்மாக்' ஊழியர்கள் சங்க மாவட்டச் பொதுச் செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார்.இதில் 'டாஸ்மாக்' சம்மேளன மாநில குழு உறுப்பினர் புஷ்பராமன், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணை பொதுச்செயலாளர் மாயகண்ணன், சிஐடியு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் நித்தியானந்தம், 'டாஸ்மாக்' ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பேசினர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!