திருவள்ளூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
திருவள்ளூரில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து. நாள்தோறும் திருவள்ளூர் வழியாக, பெங்களூர், திருப்பதி, மும்பை, பூனே, கடப்பா, கர்நூல், திருவனந்தபுரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும். தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும். விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. இங்கு பல்வேறு கல்வி நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் இருப்பதால், எப்போது பரபரப்பாக இயங்கி வரும். மேலும் திருவள்ளூர் சுற்றியுள்ள பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் என திருவள்ளூர் வந்து இங்கிருந்து தான் வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளுக்கும் சென்று வருவார்கள். சில விரைவு ரயில்கள் மட்டும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. மீதமுள்ள விரைவு ரயில் பயணம் செய்ய வேண்டும் என்றால் சென்னை சென்ட்ரலோ அல்லது அரக்கோணம் செல்ல வேண்டி இருப்பதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என ரயில் பயணிகளும், பொது மக்களும் கோரிக்கை வைத்துள்ள நிலையில், திருவள்ளூர் ரயில் பயணிகள் சங்கம் என பல்வேறு ரயில்வே சங்கத்தினர் உள்ளிட்ட அமைப்பினர், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது தெரிவிக்கையில். திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் 180 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தில் குறைந்தபட்சம் 20 விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும். ஏற்கனவே 11 விரைவு ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. எனவே மீதமுள்ள 9 விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும் எனக்கூறி ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் திருவள்ளூர் ரயில் பயணிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu