நரிக்குறவர் மக்களுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு: மீட்டு தர கோரி போராட்டம்
தங்கள் நிலத்தை மீட்டுத் தரக்கோரி நரிக்குறவ மக்களின் போராட்டம்
சோழவரத்தில் விவசாயநிலம், வீட்டுமனை மீட்டுதரவேண்டி நரிகுறவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி செங்குன்றம் அடுத்த சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோழவரம் ஊராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் சோழவரம், ஆங்காடு மற்றும் ஒரக்காடு ஆகிய ஊராட்சி மக்களுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது.
இந்நிலையில் ஒரக்காடு ஊராட்சி அல்லிமேடு பகுதியில் வசித்துவரும் சிரஞ்சிவி, சாந்தி, ஜெயமாலினி, ஜோதிபாசு, மகேந்திரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நரிகுறவர்கள் எவ்வித தகவலின்றி சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முதல் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றுவரும் மண்டபம் வரை கோஷங்கள் இட்டவாறு ஊர்வலமாக வந்து நரிகுறவர் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலம் மற்றும் வீட்டுமனைகளை அதே ஊராட்சியில் உள்ள ஒரு சிலர் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி முற்றுகை போராட்டம் செய்தனர்.
பின்னர் சோழவரம் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கருணாகரன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சமாதானம் படுத்தி நரிகுறவர்களிடம் உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட நரிகுறவர்கள் கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் வழங்கினர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், நாங்கள் நாடோடிகள், பிழப்புக்காக ஊர் ஊராக சென்று பாசி மணி, ஊசிமணி உள்ளிட்டவை விற்று பிழப்பு நடத்தி வருகிறோம். நாங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அன்று எங்களின் முன்னோர்களுக்கு 1971ம் ஆண்டு தமிழக அரசு அப்பகுதியில் வாழ்ந்து வரும் நரிக்குறோம் மக்களுக்கு 69 ஏக்கர் நிலம் வழங்கியது.
ஆனால் நாங்கள் ஊரில் இல்லாத நேரம் பார்த்து அதிகாரிகள் உதவியுடன் எங்களுக்கு வழங்கிய விவசாய நிலத்தையும் வீட்டுமனைகளையும் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் முதலாளிகள் அபகரித்து விட்டனர். எங்கள் நிலத்தை மீட்டு தர வேண்டும் என பலமுறை மாவட்ட ஆட்சியரிடம், சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கும் காவல்துறைக்கும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை .
எனவே தமிழக அரசு உடனடியாக எங்கள் பிரச்சனையில் தலையிட்டு எங்களுக்கு வழங்கிய விவசாய நிலம் மற்றும் வீட்டுமனைகளை மீட்டு தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.
இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu