திருவள்ளூரில் வரும் 24ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

திருவள்ளூரில் வரும் 24ம் தேதி தனியார்  வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
X
திருவள்ளூரில் தனியார் துறை சார்பில் சிறிய வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில், வருகின்ற 24ம் ஆம் தேதியன்று காலை 10 அளவில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடைபெற இருக்கின்றது.

இதில், 10 வகுப்பு, 12 வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. என்று மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!