வாவ்! அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மடிக்கணினி!

வாவ்! அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மடிக்கணினி!
X
தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.

தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி வாயிலாக பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு, மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், திருப்பாச்சூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஆஷா,மற்றும் அமேசான், தனியார் தொண்டு நிறுவனம் இனைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி வழியாக பயிற்சி ‌வகுப்பு தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் துவக்கமாக திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட கல்வி அலுவலர் மோகனா, குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர்.

பின்னர் ஆசிரியர்களிடையே பேசியபோது ஆசிரியர்கள் மட்டுமே ஒரு காலகட்டத்தில் கணினிகளை பயன்படுத்தினார்கள் என்கிற சூழ்நிலை மாறி மாணவர்களும் கணினி வழியாக கல்வி பயிலும் முடியும் என்ற திட்டத்தினை ஆஷா தனியார் தொண்டு நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இந்த கணினி பயிற்சி மூலமாக ஆசிரியர்கள் நல்ல முறையில் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதனை மாணவர்களுக்கு எளியமுறையில் கற்றுக்கொடுக்க வேண்டுமென்றும், இதனால் மாணவர்களின் கல்வித்தரம்மானது எதிர்காலத்தில் உயர்ந்து நிற்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆஷா கணினி வழி பயிற்சி ஆனது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் விரைவில் செயல்பட வேண்டும் என்று கூறினர்,. மேலும் இந்த பயிற்சி வகுப்பில் பங்கு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி வழங்கப்பட்டது. இதில் ஆஷா தொண்டு நிறுவனத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாராம், மற்றும் தன்னார்வலர்கள் பாஸ்கர், ஸ்ரீராம், திருவள்ளூர் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், மற்றும் ஆஷா தொண்டு நிறுவனத்தின் ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!