வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து காண்ட்ராக்டர் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளை
கான்ட்ராக்டர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து 220 சவரன் தங்க நகை மற்றும் பணத்தை மோசடி செய்து கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
திருவள்ளூர் அடுத்த வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நெடுஞ்சாலை துறை ஒப்பந்த கான்ட்ராக் தொழில் செய்து வருகின்றார். கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிக்காலத்தில் காண்ட்ராக்ட்ராக மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், அதிகாலை அளவில் பாலமுருகன் வீட்டிற்கு கார் ஒன்று வந்தது. அந்த காரில் 7 பேர் கொண்ட கும்பல் திடீரென காரை விட்டு இறங்கி பாலமுருகன் வீட்டில் போலீஸ் உடயில் திடீரென்று சென்று நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்; என உங்கள் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்தது இருப்பதாக புகார் வந்துள்ளது என்று சொல்லி வீட்டில் சோதனையிட வேண்டும் என்று போலி அடையாள அட்டைகளை காண்பித்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகனும் அவரது குடும்பத்தினரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளனர். பாலமுருகன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையின் போது பல்வேறு ஆவணங்களை பாலமுருகன் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளார். இருப்பினும் அந்த கும்பல் பாலமுருகனிடம், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, வீட்டிலிரந்த பீரோவில் 200 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் ரெக்க பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், அந்த கும்பல் நகை,பணத்துக்குரிய ஆவணங்களை வருமான வரித்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து நகை, பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கூறி அங்கிருந்து கிளம்பி காரில் ஏறி சென்றனர்.
இதுகுறித்து பாலமுருகன் செவ்வாப்பேட்டையில் உள்ள வருமான வரித்துறை மற்றும் போலீசாரிடம் விசாரித்தபோது சோதனையில் ஈடுபட்டது போலி கும்பல் என்றும், அவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நகை, பணத்தை அள்ளிச் சென்று இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக ஆவடி துணை ஆணையர் மகேஷ்குமார் மற்றும் பூந்தமல்லி உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டனர் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடி செய்த அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu