வருமான வரித்துறை அதிகாரிபோல் நடித்து கான்ட்ராக்டர் வீட்டில் நகை பணம் கொள்ளை

வருமான வரித்துறை அதிகாரிபோல் நடித்து கான்ட்ராக்டர் வீட்டில் நகை பணம் கொள்ளை
X

திருவள்ளூர் அடுத்த வெள்ளகுளத்தில் கான்ட்ராக்டர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கும்பல்.

திருவள்ளூர் அருகே வருமான வரித்துறை அதிகாரிபோல் நடித்து கான்ட்ராக்டர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த 12 பேர் கைது.

திருவள்ளூர் அடுத்த வெள்ளகுளம் பகுதியை சேர்ந்தவர் கான்ட்ராக்டர் பாலமுருகன். இவர் தனது குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். கடந்த 1ம் தேதி காலை 6 மணிக்கு இவரது வீட்டுக்கு 2 கார்களில் வந்த 12 பேர் தாங்கள் வருமானவரித்துறையில் இருந்து வருவதாக அதற்குண்டான அடையாள அட்டையையும் காண்பித்துள்ளனர். இதனையடுத்து வீட்டுக்குள் சோதனை செய்த அவர்கள் வீட்டிலிருந்த 116 பவுன் தங்க நகை, ரூ.2.50 லட்சம் ரொக்கம் மற்றும் சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நகை, பணம் மற்றும் பத்திரங்கள் பறிமுதல் செய்ததாற்கான ரசீதை கொடுத்து சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் 3வது மாடியில் வந்து தங்களை பார்க்கும்படியும் தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளனர்.

இதனால் சந்தகமடைந்த பாலமுருகன் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து ஆவடி சரக 4 தனிப்படை போலீசார் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் கோவையில் பதுங்கியிருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ரனேஷ்(46), பார்த்தசாரதி(45), நூறுலாஸ்கர்(46), பிரவீன்குமார் டேனியல்(55), வினோத்குமார்(42), சிவமுருகன்(52), நந்தகுமார்(39), ஊட்டியை சேர்ந்த பிரகாஷ்(29), மேட்டுப்பாளையம் கவிதா(30), பெங்களூரு வெங்கடேசன்(46), திருவள்ளூர் வசந்தகுமார்(39), திருநின்றவூர் செந்தில்நாதன் (42) ஆகிய 12 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடமிருந்த ரூ.5.51 லட்சம் ரொக்கம், 12 செல்போன், 2 கார், போலீஸ் சீருடை, அரசாங்கத்தின் லெட்டர்பேட் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் 12 குற்றவாளிகளையும் ஆவடி ஆணையத்திற்கு உட்பட்ட செவ்வாபேட்டை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.





Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!