தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

திருவள்ளூரில் தேமுதிக வேட்பாளர் நல்ல தம்பியை ஆதரித்து, பிரேமலதா விஜயகாந்த் திறந்த ஜீப்பில் பரப்புரை செய்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராகவும், கேப்டன் மறைவிற்கு பின் பிரேமலதாவாகிய நான் பொது செயலாளராகவும் ஆகி இருவரும் சந்திக்கும் முதல் தேர்தல் இது, இந்த தேர்தல் ஆனது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல் என பிரேமலதா விஜகாந்த் பேசினார்.
திருவள்ளூர் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் நல்ல தம்பியை ஆதரித்து திருவள்ளூரில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்த வேனில் நின்றபடி பரப்புரை செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
விஜய் பிரபாகரன் தொகுதிக்கு தேர்தல் பரப்புரைக்கு செல்லவில்லையா என பலரும் என்னிடம் கேட்கின்றனர், 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் என் பிள்ளைகள் என்பதால் தான், விருதுநகரில் தேர்தல் பரப்புரை செல்லவில்லை. தேமுதிக அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வந்து கொண்டு இருக்கிறது. எனக்குள் எவ்வளவோ துக்கங்கள் வேதனைகள், சோகங்கள் இருந்தாலும்... இந்த கூட்டணி நிச்சயம் நாளை சரித்திரம் படைக்கும். காரணம் நான் 40 தொகுதிகளுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து வருகிேறன்.
கூட்டணி அமைப்பதற்கும் முன்பு திமுக கூட்டணி 40 தொகுதியிலும் வென்றெடுக்கும் என்று கருத்துக்கணிப்புகள் சொல்லியது. ஆனால் இன்றைய கருத்துக்கணிப்பில் அதிமுக- தேமுதிக கூட்டணி 30 தொகுதிகளிலும் வெற்றி பெறுமென தெரிவித்து வருகிறது. புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி, புரட்சி கலைஞர் ஆகிய மூன்று தெய்வங்களின் ஆசிர்வாதத்தோடு நாம் வெற்றி பெறுவது உறுதி.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகவும், கேப்டன் மறைவிற்குப் பின் பிரேமலதா ஆகிய நான் பொது செயலாளராகவும் ஆகி இருவரும் சந்திக்கும் முதல் தேர்தல் இது.
எத்தனையோ நிர்பந்தங்கள் எத்தனையோ மிரட்டல்கள் எத்தனையோ தடைகளையும் தாண்டி இந்த கூட்டணி அமைந்துள்ளது. இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல். இந்த தேர்தலில் நாம் வெற்றி கண்டே தீர வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளாக , திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை விரிவுபடுத்தி நவீனப்படுத்தப்படும். அதன்மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். அதே போல் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் சீரமைக்கப்பட்டு சுற்றுலாத் தளமாக மாற்றி அமைக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்டம் வளர்ச்சியடைய நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் பழவேற்காடு முகத்துவாரம் தூர்வாரப்படும் என்பது போன்ற தேர்தல் வாக்குறுதிகளையும் தெரிவித்து பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu