திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார்: ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழை எதிர்கொள்ள  முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார்: ஆட்சியர்
X

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் செய்தியாளர் சந்திப்பில்.

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பருவ மழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரபு சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 133 இடங்கள் அதிக பாதிப்பு இடங்களாக கண்டறியப்பட்டு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு தாயார் நிலையில் உள்ளதாகவும்,மழை குறித்தான பாதிப்புகளை உடனுக்குடன் தகவலை 24 மணி நேரமும் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி 1077 என்ற அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தான மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் தற்பொழுது வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். எனவும் பேரிடர் காலங்களில் சுணக்கம் காட்டாமல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை திறமையாக கையாள வேண்டும். மாவட்டத்தில் 133 இடங்கள் அதிக பாதிப்பு இடங்களாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், மழை பாதிப்பு கண்டறிய 64 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் 660 தற்காலிக தங்கும் முகாம்களும், 7 புயல் பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 7 இடங்களில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும், பேரிடர் காலத்தில் பிரசவிக்க உள்ள கர்ப்பிணி பெண்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை பாதிப்புகள் ஏற்பட்ட ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறுகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி சோழவரம், புழல், கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை ஏரிகளை 24 மணி நேரம் கண்காணிக்க நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மழை குறித்தான பாதிப்புகளை உடனுக்குடன் தகவலை 24 மணி நேரமும் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி 1077 என்ற அவசர எண்ணும், மேலும் கட்டுப்பாடு அறை எண்ணாக 044 -27664177, 044 - 27666746 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு தகவலை தெரிக்கலாம் என்றும் 9444317862, / 9498901077 என்ற வாட்ஸ்அப் கண்ணுக்கும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!