திருவள்ளூர் அருகே கோழிக்கடை அதிபர் வீட்டில் நகை பணம் கொள்ளை, போலீசார் விசாரணை

திருவள்ளூர் அருகே கோழிக்கடை அதிபர் வீட்டில் நகை பணம் கொள்ளை, போலீசார் விசாரணை
X

நகை பணம் கொள்ளைப் போன கோழிக்கடை அதிபர் வீடு

திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் கோழிக்கடை அதிபர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே புட்லூரில் பட்டப்பகலில் 3 பவுன் நகை மற்றும் 1லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை; தொடர் கொள்ளையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஊராட்சி வி.ஐ.பி நகர் பகுதியில் வசித்து வருபவர் முரளி தாஸ். புட்லூர் ரயில்வே கேட் அருகில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

தினமும் கோழியை மொத்தமாக வாங்கி சில்லறை வியாபாரம் செய்து வருகிறார். முரளி தாஸ் இன்று காலை 10 மணியளவில் தனது வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் ரயில்வே கேட் அருகில் உள்ள தனது கடைக்கு வந்து வியாபாரம் சென்று விட்டார்..

மதியம் உணவு இடைவேளைக்காக 1.30 மணியளவில் வீடு திரும்பிய போது அவருக்கு அங்கு அதிர்ச்சியும் காத்திருந்தது. அவர் வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோ மற்றும் துணிகளை ஆங்காங்கே சிதறடிக்கப்பட்டு இருந்தது. மேலும் . பீரோவில் வைத்திருந்த 90,000 பணமும் மற்றும் 3சவரன் நகையும் அங்கிருந்து திருடப்பட்டிருந்தது தெரியவந்தது..

இது குறித்து தகவல் அறிந்த செவ்வாய் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!