கோழிக்கறி வாங்குவதில் தகராறு: ஜிம் மாஸ்டருக்கு அரிவாள் வெட்டு

கோழிக்கறி வாங்குவதில் தகராறு: ஜிம் மாஸ்டருக்கு அரிவாள் வெட்டு
X

பைல் படம்

திருவள்ளூர் அருகே கோழிக்கறி வாங்குவதில் தகராறு ஏற்பட்டதில் ஜிம் மாஸ்டரை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் அடுத்த புட்லூர் ராமாபுரம் பகுதியில் அர்ஜுன் பவர் ஜிம் என்ற உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் சுரேஷ் இவர் புட்லூர் ராமாபுரம் பகுதியில் பூஜா சிக்கன் சென்டர் என்ற கோழி கறி கடையை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்றைய முன்தினம் திருவள்ளூர் அடுத்த தொழுவூர் பகுதியைச் சேர்ந்த சிலர் சுரேஷ் இன் கடையில் கறி வாங்க வந்தபோது ஏற்பட்ட சிறிய தகராறில் ஜிம் மாஸ்டர் சுரேஷ் கோழிக்கறி வாங்க வந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது

இதனை எடுத்து நேற்று இரவு சுரேஷின் ஜிம்மிற்கு வந்த 15-க்கும் மேற்பட்டோர் ஜிம்மில் இருந்த ஜிம் மாஸ்டர் சுரேஷ் மற்றும் அவரது தம்பி பாஸ்கரன் ஆகியோரை சரமாரியாக தாக்கியதுடன் அறிவாளாலும் வெட்டியுள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்த ஜிம் மாஸ்டர் சுரேஷ் மற்றும் அவரது தம்பி பாஸ்கரன் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்ததை அடுத்து தற்பொழுது இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஜிம் மாஸ்டரை வெட்டியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோழிக்கறி வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையில் ஜிம் மாஸ்டர் வெட்டப்பட்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story