பொங்கல் பண்டிகையையொட்டி பழங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Pongal Welfare Assistance To Tribes திருவள்ளூர் அருகே ஊத்துக்கோட்டை அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு 10க்கு மேற்பட்ட பழங்குடி கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு லைன்ஸ் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

Pongal Welfare Assistance To Tribes

திருவள்ளூர் அருகே பொங்கல் கொண்டாட்டத்திற்கு பச்சைக் கம்பளம் விரித்து மேல தாளங்களுடன் பழங்குடியின மக்களுக்கு உற்சாக வரவேற்பு .பெண்கள் கும்மி அடித்தும் நடனமாடி கொண்டாட்டத்தால் பழங்குடியினர் கிராமம் விழாக்கோலம் பூண்டது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டைசுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 10 மேற்பட்ட பழங்குடியினர் கிராமங்களைச் சேர்ந்த 500 மேற்பட்ட மக்கள் ஒன்று திரட்டி எல்லமாகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சி லட்சுமி நகரில் சென்னை கிழக்கு கடற்கரை லயன்ஸ் சங்கம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.

Pongal Welfare Assistance To Tribes



பாரம்பரிய அடையாளமான மா இலை வாழை குருத்தோலை தோரணங்கள் குடியிருப்புகளில் சுற்றி கட்டப்பட்டு பச்சைக் கம்பளம் விரித்து பழங்குடியின மக்கள்மேல தாளங்களுடன் பொங்கல் விழாவுக்கு உற்சாகமாக அழைத்து வரப்பட்டனர்.

பழங்குடியின பெண்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து கும்மி அடித்து உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.அம்மக்களுக்கு போர்வைகள் புத்தாடைகள் உள்ளிட்ட தொகுப்புகள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் வழங்கினார்கள்.

பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் ஒன்று திரண்டு கொண்டாடிய பொங்கல் விழாவால் அக்கிரமம் விழாக்கோலமாக மாறியது.இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் மாவட்ட துனை கவர்னர் லாயன் போஸ் வி.ஜி.ஏன். சேர்மன் சுரேஷ்பாபு ,ஜோன் சேர்மன் டாக்டர் மகேஷ்வரன்,சென்னை கிழக்கு கடற்கரை லயன்ஸ் சங்க தலைவர் பி. கஜபதி தொழிலதிபர் சீனிவாசன் இணைந்து கரங்கள் செயலாளர் பாக்கியராஜ்சென்னை கிழக்கு கடற்கரை லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business