ஊத்துக்கோட்டையில் திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு

ஊத்துக்கோட்டையில் திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு
X

ஊத்துக்கோட்டை பேரூர் திமுக நிர்வாகிகளுக்கு நாள்காட்டி மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை டி.ஜே.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்.

ஊத்துக்கோட்டையில் திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில்,உள்ள திமுக நிர்வாகிகளுக்கு ஆங்கில புத்தாண்டு நாள்காட்டிகள் மற்றும் வேட்டி, சேலை, இனிப்பு, கரும்பு, ரொக்கத் தொகை உள்ளிட்டவைகள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பேரூர் திமுக செயலாளரும், திட்டக்குழு உறுப்பினருமான அபிராமி குமரவேல் தலைமை தாங்கினார். எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.ஜெ.மூர்த்தி, பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் கலந்து கொண்டு திமுக நிர்வாகிகளுக்கு நாள்காட்டி மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வாழ்த்துக்களை கூறி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் வி.பி.ரவிக்குமார், விவேகானந்தா கல்லூரி ராஜேஷ்,கே.வி.லோகேஷ், கோல்டு மணிகண்டன், நித்தியபிரகாஷ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!