1500 நபர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்கல்

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் 1,500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 43,பனப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது
.Pongal Festival Welfare Gift
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் 1,500 நபர்களுக்கு வேட்டி,சேலை,2 காலண்டர்கள் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு அடங்கிய நலத்திட்ட உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊத்துக்கோட்டை அருகே உள்ள 43,பனப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். எல்லாபுரம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் மூர்த்தி,சத்தியவேலு, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் கோல்டுமணி,மாவட்ட கவுன்சிலர் சித்ராமுனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அனைவரையும் பொதுக்குழு உறுப்பினர் இராமமூர்த்தி,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் வரவேற்றனர்.இதில்,மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணிச் செயலாளர் செங்குட்டுவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அடங்கிய நலத்திட்ட உதவிப் பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றி பேசினார்.
இதில்,மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைச் செயலாளர் உதயசூரியன், விவேகானந்தா கல்லூரி ராஜேஷ்,ரவிக்குமார், லோகேஷ்,ஏனம்பாக்கம் சம்பத்,ஜான் பொன்னுசாமி,சுமன்,ஜெயலலிதா சசிதரன், .சங்கர்,செல்வராஜ்,சீனிவாசன்,பழனி, கார்த்திகேயன்,பார்த்திபன், சிவாஜி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,பேரூர்,கிளைக் கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் கே.ராஜேஷ் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu