திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாஜகவினர் கைது

திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாஜகவினர் கைது
X

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்த காவல்துறையினர் 

திருவள்ளூரில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்திற்கு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு. பாஜகவினர் கைது.

திருவள்ளூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து கட்டாயமாக அனைவரையும் கைது செய்வதால் பதற்றம்- போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஏற்பட்ட உயிரிழப்புகளை தடுக்க தவறியதாக தமிழ்நாடு அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு

நேற்று வரை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்த நிலையில் திருவள்ளூர் நகர போலீசார் தற்பொழுது அனுமதியை ரத்து செய்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது . ஆர்ப்பாட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட ஜெனரேட்டர் டேபிள் வாட்டர் என அனைத்தையும் போலீசார் அப்புறப்படுத்தினர்,

இந்நிலையில் பாஜகவினரை கட்டாயமாக தூக்கி சென்று பேருந்தில் ஏற்றியதால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவினரின் கைது நடவடிக்கையை செய்தி அறிந்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை பயிற்சி உதவி ஆய்வாளர் ரகுமான் என்பவர் ஒருமையில் பேசி செல்போனை தட்டி விட்டு வீடியோ எடுக்க கூடாது என அராஜகத்தில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!