கோலப்பஞ்சேரியில் மணல் கடத்திய 4 பேர் கைது: டிராக்டர்,ஜேசிபி பறிமுதல்

கோலப்பஞ்சேரியில் மணல் கடத்திய 4 பேர் கைது: டிராக்டர்,ஜேசிபி பறிமுதல்
X

மணல் கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட  டிராக்டர் மற்றும் ஜே.சி.பி எந்திரம். 

கோலப்பஞ்சேரி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு சப்-இன்ஸ்பெக்டர் சோபா தேவி மற்றும் போலீசார் நேற்று கோலப்பஞ்சேரி ஏரிக்கரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக லாரி டிரைவரான நசரத்பேட்டையைச் சேர்ந்த சுரேந்தர் (23), அரவிந்தன் (39), அருண் (18), விஜயன் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து டிராக்டர் மற்றும் ஜே.சி.பி எந்திரங்களை போலீசார் பரிமுதல் செய்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!