ஊத்துக்கோட்டை அருகே பள்ளி மாணவர்களின் செருப்பை எரித்த போலீஸ் டி.எஸ்.பி.

போலீஸ் டிஎஸ்பி மீது புகார் மனு கொடுக்க வந்த மாணவர் விஷ்வா.
பள்ளி மாணவனை துன்புறுத்தியதாக டி.எஸ்.பி .மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவனின் பெற்றோர் எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியானது இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் மாணவர்களின் ஒழுங்கற்ற செயல்களை கண்காணிக்கும் விதமாக ஊத்துக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி. கணேஷ் குமார் பள்ளிக்கு சென்றுள்ளார்
அப்பொழுது ஒவ்வொரு வகுப்புகளுக்கு சென்று மாணவர்கள் சிகை அலங்காரம் எப்படி இருக்கிறது மாணவர்கள் அணிந்து வரும் காலணியில் எது மாதிரியானது என்று பார்த்துள்ளார் அப்பொழுது ரப்பர் செருப்புகள், பழைய செருப்புகள் போன்றவைகளை மாணவர்கள் அணிந்து வருவதை பார்த்து உள்ளார்
சுமார் 80 மாணவர்களின் காலணிகளை எடுத்துச்சென்று குப்பை தொட்டியில் வீசி கொளுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை மாணவர்கள் கேட்டதற்கு காலணிகள் பழையதாக உள்ளதாகவும் உயர்ந்த காலணிகளை அணிந்து வர வேண்டும் என்றும் சொல்லியதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் டி.எஸ்.பி.க்கு பயந்து கேட்கவில்லை என்று தெரிய வருகிறது.இதனைத் தொடர்ந்து பிளஸ் ஒன் படிக்கும் விஷ்வா என்ற மாணவன் மட்டும் டி.எஸ்.பி மூலம் அதிக அளவில் துன்புறுத்தப்பட்டதாக அவருடைய பெற்றோர்களுடன் செனறு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.
அந்த மனுவில் என் மகனின் செருப்பை தீயிட்டு எரித்து உடல் ரீதியாக துன்பப்படுத்திய ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் மீது காவல் துறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் தாய் வத்சலா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu