கொலை செய்ய காரில் கடத்திச் சென்ற 4 பேர் கைது: போலீசார் அதிரடி
கொலை செய்யும் நோக்கில் காரில் கடத்தியவர்களை ஆயுதங்களுடன் கைது செய்த காவல்துறையினர்
Crime News Tamil -திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை கிராமத்தை சேர்ந்தவர் பைரவன். இவரது மகன் சுனில் (23). சுனில் தனது தாய் தந்தை ஆகியோர் நடுக்குத்தகையில் நடத்தி வரும் ஹோட்டலில் அவர்களுக்கு உதவியாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சுனிலும் அவரது நண்பர்களான கோகுலீஸ்வரன், சுரேஷ், சரண் ஆகியோர் ஆட்டோவை எரித்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, ராஜேஷ் என்பவரின் இன்னோவா காரை நான்கு பேரும் அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.
இதனை அடுத்து சுனில் மற்றும் அவரது நண்பர்கள் ஆகிய 4 பேரும் கடந்த ஆறாம் தேதி மாலை 4 மணி அளவில் வேப்பம்பட்டு அடுத்த அயத்தூர் இ.எஸ்.என்.நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தபோது, இரவு 11:30 மணி அளவில் கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது ஜன்னலில் திறந்து பார்த்தபோது நடுக் குத்தகையை சேர்ந்த ராஜேஷ் ஆரோன், பீட்டர், பிரதாப், மணி என்கிற கருணாகரன், பாலாஜி, ரவி ஆகியோர் வீட்டு வாசலில் இருப்பது தெரிய வந்தது.
ஆனால் கதவை திறக்காமல் கோகுலீஸ்வரன், சுரேஷ், சரண் ஆகிய மூன்று பேரையும் எழுப்பி உள்ளார் சுனில். இந்நிலையில் கதவை தட்டியவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து, கத்தியுடன் சுனில் உள்ளிட்ட நான்கு பேரையும் தாக்கி நால்வரையும் காரில் ஏற்றியுள்ளனர்.
சுனில் உள்ளிட்ட நான்கு பேரையும் ஒரு காரிலும் இவர்களுக்கு பின்னால் ராஜேஷ் ஓட்டி வந்த ஸ்விப்ட் காரும் வந்தது. இந்நிலையில் செவ்வாப்பேட்டை அடுத்த திருநின்றவூர் சென்றபோது செவ்வாப்பேட்டை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் . இதில் பின்னால் காரில் வந்தவர்கள் வண்டியுடன் தப்பித்து விட்டனர்.
இதனை அடுத்து சுனில் உள்ளிட்ட நான்கு பேரை கடத்தி வந்த காரில் இருந்த மணி என்கிற கருணாகரனை திருநின்றவூர் போலீசார் கைது செய்தனர்.
அப்போது தங்கள் நான்கு பேரையும் கத்தியால் வெட்டி கொலை செய்ய கடத்திக் கொண்டு போகிறார்கள் என்று காவல்துறையிடம் சுனில் தெரிவித்ததையடுத்து, அவர்களை உடனடியாக மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இது குறித்து சுனில் கொடுத்த புகாரின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மணி என்கிற கருணாகரன் (28) ஆரோன் என்கிற அருண் பாபு (28 ) புருஷோத்தமன் என்கிற பீட்டர்( 29) ஜெய பிரதாப் என்கிற பிரதாப் (29 ) தேவ் ஆனந்த் என்கிற ஆனந்த் (30) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
மேலும் கொலை செய்வதற்காக கடத்தி சென்ற கத்திகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய ராஜேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu