திருமழிசையில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நடை பேரணி

திருமழிசையில் இருந்து திருவள்ளூர் வரை நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நடை பேரணியில் தன்னார்வலர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார்.
திருமழிசையில் இருந்து திருவள்ளூர் வரை நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நடை பேரணியில் கலந்துகொண்டு வழி நெடிகிலும் நெகிழிகளை சேகரித்த தன்னார்வலர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியிலிருந்து வாக் பார் பிளாஸ்டிக் தொண்டு நிறுவனத்தின் சார்பாக நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நடை பேரணி நடைபெற்றது இந்த விழிப்புணர்வு நடை பேரணியில் திருமழிசை பகுதியில் இருந்து திருவள்ளூர் வரை வழி நெடுகிலும் உள்ள நெகிழிகளை வாக் பார் பிளாஸ்டிக் தொண்டு நிறுவனத்தின் தன்னார்வலர்கள் நெகிழிகளை சேகரித்து வந்தனர். சுற்றுச் சூழல் மாசடைவதற்கு மிக முக்கியமான காரணமாக நாம் அதிகம் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்கள் வளர்ச்சி தான் எனவும் பிளாஸ்டிக் மூலம், வாகன உதிரிப்பாகங்கள், தண்ணீர் பைகள், பிளாஸ்டிக் குடங்கள், அணிகலன்கள். என பலதரப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவற்றை ஒழிக்கும் விதமாக இன்று நடைபெற்ற வாக் பார் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணியில் திருமழிசை பேரூராட்சி பகுதியில் தொடங்கி வெள்ளவேடு, நேமம், அரண்வாயல், மணவாளநகர் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 100.க்குமேற்ப்பட்ட தன்னார்வலர்கள் நடைபயணமாக நெகிழிகளை சேகரித்து விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வரவேற்று பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu