செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டரிடம் மனு

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டரிடம் மனு
X

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

திருவள்ளூர் அருகே கீழ நல்லாத்தூர் கிராமப் பகுதியில் செல்போன் டவர் அமைக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

குடியிருப்பு பகுதியில் ஏர்டெல் டவர் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கதிர்வீச்சினால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.

திருவள்ளூர் மாவட்டம்,கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்நல்லாத்தூர் பகுதியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் புதிதாக செல்போன் டவர் ஒன்று அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த செல்போன் டவர் அமைப்பதனால் பொதுமக்களுக்கு அதிக அளவில் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படுவதாவும், இந்தக் கதிர்வீச்சினால் தோல் நோய், கண்களுக்கு பாதிப்பு, காது கேட்காத தன்மை ஏற்படும் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


ஏற்கனவே அப்பகுதியில் ஜியோ டவர் அமைத்ததினால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் என அனைவரும் கதிர்வீச்சால் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர் அப்பகுதி பொதுமக்கள்.

இதனைத் தொடர்ந்து புதிதாக குடியிருப்பு பகுதியில் மற்றொரு செல்போன் டவர் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதால் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ்யிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொதுமக்கள் கூறுகையில்

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன். எங்களுடைய உடல்நிலை மெலிவுக்கு காரணமே ஏற்கனவே எங்கள் குடியிருப்பு பகுதியில் ஜியோ டவர் அமைத்து இருப்பதாகவும், அதனால் எங்கள் பகுதியில் முதியவர்கள் கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் அதிக அளவில் பாதிப்புப்பட்டுள்ளனர். புதிதாக அங்கு அமைய உள்ள ஏர்டெல் டவர் அமைப்பதற்கான கட்டுமான வேலைகளை நடைபெற்று வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவை அளித்துள்ளோம் என தெரிவித்தனர்.

Tags

Next Story
ai tools for education