சுடுகாடு பாதை அமைத்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!
சுடுகாடு பாதை அமைத்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் மனு அளிக்க வந்தபோது.
திருவள்ளூர் அருகே சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தரக்கோரி அருந்ததியர் இனமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பூவாலை கிராமத்தில் அருந்ததியர் இனத்தை சேர்ந்த சுமார் 50 குடும்பங்களை சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த மூன்று தலைமுறையாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இங்கு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எடுத்துச்செல்ல சாலை வசதி இல்லாமல் தவிக்கின்றனர். இறந்தவர்களை சுடுகாட்டில் அடக்கம் செய்ய தனிப்பட்ட நபர்களுக்கு சொந்தமான பட்டா நிலங்களின் வழியாக எடுத்து செல்லும் நிலை ஏற்படுகிறது.இதனால் நிலத்தின் உரிமையாளர்கள் அடிக்கடி இறந்தவர்களின் சடலங்களை அவர்கள் நிலத்தின் வழியாக எடுத்து செல்லக்கூடாது என்று தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த சுடுகாட்டுப்பாதையை அமைத்து தரக்கோரி பலமுறை ஊராட்சி அலுவலகத்திலும், கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தியும், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர், பொன்னேரி கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் இவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்பதால் 30-க்கும் மேற்பட்ட அப்பகுதி சார்ந்த பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu