ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி யிடம் மனு

ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி யிடம் மனு
X

ஏலச்சீட்டு மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

பள்ளிப்பட்டு அருகே ஏல சீட்டு நடத்தி ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்யப்பட்டது.

பள்ளிப்பட்டு அருகே ஏலச்சீட்டு நடத்தி இரட்டிப்பு பணம் மற்றும் நிலம் வழங்குவதாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்தவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், கிருஷ்ணமாராஜகுப்பம் அஞ்சல், கன்னிகம்பாபுரம் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி உறவினரான பிரகாஷ் ஆகியோர் ஏல சீட்டு நடத்தி வந்தனர்.அவர்கள் தங்களிடம் ஏலச் சீட்டு திட்டத்தில் கலந்து கொண்டு பணம் செலுத்தி வந்தால் அவர்களுக்கு திருத்தணி,திருப்பதி, ரேணிகுண்டா, பெங்களூர்,பள்ளிப்பட்டு போன்ற பகுதிகளில் காலி வீட்டுமனை தருவதாக கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து பீரக்குப்பம், கோரமங்கலம், மாம்பாக்கம், திருத்தணி போன்ற சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்களிடம் ஏலச் சீட்டு திட்டத்தில் சேர்ந்து மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரஸ்வதி அவரது கணவர் சுப்பிரமணியம் உறவினர் பிரகாஷ் ஆகியோர் ஏலச்சீட்டு திட்டத்தில் பணம் கொடுத்தவர்களுக்கு உரிய முறையில் வீட்டுமனை தராமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இது குறித்து பணம் கட்டியவர்கள் கேட்டபோது அவர்கள் சரியான பதில் சொல்லாமல் சுமார் ரூபாய் ஒரு கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகிவிட்டனர். மேலும் அவர்கள் பணம் கட்டியவர்களுக்கு போலியான ரசீதுகள், போலியான அக்ரிமெண்ட் காப்பி போன்றவற்றை கொடுத்து ஏமாற்றி உள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளிடம் இது குறித்து தக்க நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டு தருமாறு புகார் மனு அளித்தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட அவர் மனு மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!