சாலை பணிகளுக்காக ஜெப கூடம் இடிக்கப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு

சாலை பணிகளுக்காக ஜெப கூடம் இடிக்கப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு

பைல் படம்.

சாலை பணிகளுக்காக ஜெப கூடத்தை இடித்ததை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஜெபக் கூடத்தை இடித்து சேதம் ஏற்படுத்தி ஜெபம் நடத்தாதபடி இடையூறு செய்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு பகுதியில் அமைந்துள்ள ஜெபக்கூடத்தை சட்ட விரோதமாக அத்துமீறி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கிறிஸ்தவ மக்கள் பிரார்த்தனை செய்யும் ஜெப கூடத்தை இடித்து சேதம் ஏற்படுத்தி ஜெபம் நடத்தாதபடி இடைவெளி ஏற்படுத்திய தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் மாநில இயக்குனர் இந்திய சிறுவர் சுவிசேஷ ஐக்கியம் ரவி கிறிஸ்டியன் கோரிக்கை மனுவை அளித்தார்.

இந்த மனுவில் கடந்த 2007 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கிராம பகுதியில் சுமார் 20080 சதுர அடிகள் கொண்ட மனை எண்கள் 59 மற்றும் 60 முறையாக சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் பெற்று கட்டிடம் கட்டிக் கொண்டு கிறிஸ்தவ மக்கள் பிரார்த்தனை செய்யும் ஜெபக்கூடம் அமைத்து நடத்தி வருகிறோம்.

ஆனால் தற்போது நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைத்துறை nh205 நிலத்தை கையகப்படுத்தும் போது மேற்படி எனக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த எவ்வித உத்தரவும் அல்லது அறிவிப்பும் வழங்கவில்லை. இடம் குறித்து ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவைவில் உள்ளது. ஆனால் கடந்த 21.08.2024அன்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகள் திடீரென்று ஈக்காடு பகுதியில் உள்ள ஜெபக்கூடத்தை சட்ட விரோதமாக பாதி அளவு இடித்துவிட்டு சென்றுவிட்டனர்.

இது சம்பந்தமாக எனக்கு எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதனால் நாங்கள் மன உளைச்சல் அடைந்துள்ளோம் என்றும் எங்களுக்கு சொந்தமான இடத்தை எதற்காக இடித்தார்கள் என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Tags

Next Story