வீடுகளை இடிக்காமல் சாலை அமைக்க கோரி குடியிருப்பு பகுதி மக்கள் மனு

வீடுகளை இடிக்காமல்  சாலை அமைக்க கோரி குடியிருப்பு பகுதி மக்கள் மனு
X

ஊராட்சி தலைவர் தலைமையில் மனு அளிக்க வந்த கிராம மக்கள்.

திருவள்ளூர் அருகே வீடுகளை இடிக்காமல் சாலை அமைக்க கோரி குடியிருப்பு பகுதி மக்கள் மனு அளித்தனர்.

திருவள்ளூர் அருகே மப்பேடு ஊராட்சியில் தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழக விரிவாக்கத்திற்காக ஊரில் உள்ள மயான பூமி பாதை ஆக்கிரமிக்கப்படாமல் இருக்கவும் அதன் வழியில் உள்ள குடியிருப்புகள் அகற்றப்படாமல் இருக்க கோரி மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் மனு ஊராட்சி மன்ற தலைவர் சித்தையா ஜெகதீசன் தலைமையில் அளிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மப்பேடு ஊராட்சியில் ஒன்பதாவது வார்டு காந்தி பேட்டை பகுதியில் குடிசை பகுதி மக்கள் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக அதே இடத்தில் வசித்து வருகின்றார்கள்.

அந்த இடத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்றக் கழக விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்த இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் ஊராட்சி தலைவர் சித்தையா ஜெகதீசன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாங்கள் பல தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த எங்கள் ஊரின் மயான பூமி பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது/ மக்கள் குடியிருக்கும் வீடுகளை கிராம நிர்வாக அதிகாரி மற்றும் சர்வேயர் இடிக்க குறியீடு செய்திருக்கின்றனர். அந்தப் பாதையானது 20 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கின்றது. ஒரு மயான பாதை 20 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கத் தேவையில்லை என்பது எங்களது கிராமத்தினர் உடைய கருத்து.

எனவே மயான பாதியானது 10 மீட்டர் அகலத்திற்குள் அமைத்து ஏற்கனவே வீடுகள் இருக்கின்ற பகுதிக்கு எந்த இடையூறும் செய்யாமல் தரும்படி மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த கோரிக்கையானது ஒட்டுமொத்த கிராம வாசிகளின் பாகுபாடு இன்றி கொடுத்த கருத்து .எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டப்பட்ட வீடுகளுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாத படி எங்களுக்கு பாதை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Tags

Next Story
ai solutions for small business