திருத்தணி தொகுதியில் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள்ள கலெக்டரிம் எம்எல்ஏ மனு

திருத்தணி தொகுதியில் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள்ள கலெக்டரிம் எம்எல்ஏ மனு
X

திருத்தணி தொகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமெனகலெக்டரிடம், எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்தார்

எம்எல்ஏவிடம் மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்

திருத்தணி தொகுதியில்வளர்ச்சி திட்ட பணிகள்மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டரிடம், எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்தார்

திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ் .சந்திரன், மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருத்தணி தொகுதியில் மயானத்திற்கு செல்லும் சாலை வசதி.மேம்பாலம்.தாழ்வாக உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை உயர்த்திக் கட்டுதல்.நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது. தொகுதியிலுள்ளமாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கநடவடிக்கை எடுப்பது உட்பட தொகுதியில் நிலவும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுரக்காய் பேட்டை ஊராட்சியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளி மிகவும் தாழ்வாக உள்ளதால் மழைக்காலங்களில் மாணவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.

எனவே இதனை பாதுகாப்பான முறையில் உயர்த்தி கட்டித்தர வேண்டும்.மயானத்திற்கு சாலை வசதி ஏற்படுத்திட வேண்டும்.நெடியும் பகுதியில் மேம்பாலம் அமைத்திட வேண்டும்.நொச்சிலியில்பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.அம்மையார்குப்பம் ஏரிக்கரை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.தொகுதியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறுஅடிப்படை கோரிக்கைகளை பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் ஆர்த்தி ரவி, ஜி. ரவீந்திரன் ஆர்.கே. பேட்டை துணைத் தலைவர் ரமேஷ் உட்பட பலர் உடன் இருந்தனர்.


Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!