அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் மனு

அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் மனு

பைட் படம்.

ஆவடி அருகே மோரை பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆவடி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம்,ஆவடி அடுத்த மோரை பகுதியில் சந்துரு, சண்முகப்பிரியா, ஆகியோருக்கு சொந்தமான முக்கால் கிரவுண்ட் நீளம் வாங்கி உள்ளனர். அதன் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசுக்கு சொந்த நிலமான‌‌ ‌வண்டி பாதை செல்லும் வழி உள்ளது.அதனை பகுதியில் உள்ள மகேஸ்வரி ரெட்க்குலஸ், என்பவர் ஆக்கிரமித்து உள்ளார். அதனை அப்பகுதி பொதுமக்கள் கேட்டபோது உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் எனவும், யாரிடம் நீங்கள் பொய் சொன்னாலும் இந்த இடத்தை கொடுக்க முடியாது என ஒருமையில் பேசி பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரிக்கு அந்த இடத்தை சரியான முறையில் அளந்து கொடுக்குமாறு கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனால் அப்பகுதி கிராம அலுவலக அதிகாரி ஒரு தலைபட்சமாக அந்த நிலத்தை அளவை செய்துள்ளதாகவும், பொதுமக்கள் குற்ற சாட்டுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம், நேரில் சென்று ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்டு தரக்கோரி புகார் மனு அளித்துள்ளனர்.

Tags

Next Story