ஊத்துக்கோட்டையில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

ஊத்துக்கோட்டையில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்
X

ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை கருப்பு கொடிகளுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்.

மாதங்களாகியும் இடத்தை அளவீடு செய்து பட்டா வழங்க வருவாய் துறையினர் மறுப்பதால் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே, லட்சிவாக்கம் ஊராட்சியில் 1500.க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், 43 பட்டியலின குடும்பங்களுக்கு பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டுமனை பட்டாவை வருவாய்த் துறையினர் வழங்கினர்.

தற்போது வரை அந்த இடத்தை அளவீடு செய்து வழங்குமாறு பலமுறை அதிகாரியிடம் கோரிக்கு மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த சார் ஆட்சியர் சேகர், இதுகுறித்து ௭ நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!