திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
X

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளை ஒப்படைக்கும் நூதன முறை போராட்டம் நடைபெற்றது.

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்றுத் திறனாளிகளை ஒப்படைக்கும் நூதன போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கீதா தலைமையில் மாற்றுத்திறனாளிகளை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், விண்ணப்பம் செய்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்,சட்ட விதிகளின் படி 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளின் ரேசன் அட்டைகளை ஏஏஒய் அட்டைகளாக மாற்றி மாதம் 35 கிலோ ரேசன் அரிசி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.


மேலும் மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகளை ஒப்படைக்கும் நூதன போராட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்டோர் வந்து கலந்து கொண்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் இது குறித்து மாற்றுத்திறனாளிகள் தெரிவிக்க கை கால் உள்ளவர்கள் பிழைப்பு நடத்த முடியாமல் பறித்தவித்து வரும் நிலையில் எங்கள் போல் கை கால் விளங்காமல் வாய் பேச முடியாமல் பெற்றோர்களுக்கு பாரமாக இருக்கும் தங்களுக்கு அரசு தரப்பில் எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை என்றும் இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் சந்தித்து மனு அளித்தும், எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சிலரின் எவ்வித ஆதரவின்றி உணவுக்குக் கூட வழி இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், எனவே தற்போதாவது தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தாங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தங்களுக்கு அரசு தரப்பில் வழங்கக்கூடிய அடிப்படை உரிமைகளையும், உதவிகளையும் வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது